Tuesday, June 14, 2011

கவிதைகள்

1) வெற்றியின் ஒளி

நான் முட்டிக் கொண்ட
போதெல்லாம் உடைந்து
போனது என் தலை மட்டுமல்ல…
வெற்றியின் கட்டுத் தளைகளும் தான்…

நான் விழுந்த போது
தேய்ந்து போனது
என் முகம் மட்டுமல்ல
தோல்வியின் அகமும்!

எத்தனையோ இரவுகள்
எத்தனையோ விளக்குகள்
ஆனாலும் எனது
கண்கள் எப்போதும்
வெற்றியின் ஒளியை நாடியே!

2)லட்சியம்

என் லட்சியங்கள் நச்சதிரங்களாக
எட்டாத தூரத்தில் மின்னுகின்றன
முயன்று பார்கிறேன் எட்டிப்பிடிக்க
நான் மூன்று அடி வைத்தால்
நான்கு அடி சறுக்கி விழுகின்றேன்
என் லட்சியங்கள் கை சேருமா
அல்லது கானல் நீராய் போகுமா...???

3)

நிலவின் ஒளி

அம்மாவசை தினத்தில்
நிலவின் ஒளி
எப்படி?

கண் எதிரே நீ.....

4)

எனது பெயர்

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கின்றது என்று!!

5)

நீ, நான் & தெருக்குழாய்!

உன் குடத்தில்
விழாத வருத்தத்தில்
கீழே
சிந்திச் சிந்தி
தன்னை மாய்த்துக் கொள்கிறது
தண்ணீர்...

நீ வந்து
நிற்கும்
நேரங்களில்
கலராய்
மாறிப் போகின்றது
கருப்பு டாங்கு அங்கு...

தடுக்கி விழப் பார்த்த நீ
தாய் முகம் பார்த்து
வழியும் நேரங்களில்
தவற விட்ட குடத்தோடு
உருளுகிறது
என் மனமும்...

எங்கும் நிற்காத
உன் பஞ்சுக் கால்கள்
வரிசையில் நிற்கும்போது
அமர்ந்து கொண்டிருக்கும்போதும்
நான் நிற்கிறேன்
முட்களின்மீது...

No comments:

Post a Comment