Wednesday, November 23, 2011

IYYAPPA PADALKAL

                                                               ஐய்யப்ப பாடல்கள் 

மூசிக வாகன மோதக அஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமண ரூப மகேஷ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
விக்ன விநாயக பாத நமஸ்தே
ஓம் கண்ணிமூல கணபதி பகவானே
சரணம் ஐயப்பா

                   விநாயகர் திருப்புகழ்

கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிப்பேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவ
கற்பக மெனவினை கடிதேரும்
மத்தமும் மதியமும் வைத்திடு மரன் மகன்
மற்றொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமிழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணி படு
அப்புன  மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மண மருள் பெருமானே.


                              பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
                                          -  பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அ----ரமரத்து நிழலிலே
விற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
                                            - பிள்ளையார்
ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானைவயிறு படைத்தவர் பக்தர் துயர் துடைப்பவர்
                                             - பிள்ளையார்
ஆறுமுக வேலனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்
                                             - பிள்ளையார்
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும் 
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
                                              - பிள்ளையார்
சங்கரனின் புதல்வனாம் சாத்திரத்தின் முதல்வனாம்
சகலத்திற்கும் மூலனாம் சக்திவாய்ந்த பிள்ளையார்
                                              - பிள்ளையார்
வன்னி மரத்து நிழலிலே வரங்கள் தரும் பிள்ளையார்
வில்வ மரத்து நிழலிலே வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
                                              - பிள்ளையார்
நெல்லி மரத்து நிழலிலே நின்றிருக்கும் பிள்ளையார்
பக்திதரும் பிள்ளையார் முக்திதரும் பிள்ளையார்
                                              - பிள்ளையார்
ஆதரிக்கும் பிள்ளையார் ஆனைமுகப் பிள்ளையார்
அருளை அள்ளித் தந்திடும் ஆண்டவனாம் பிள்ளையார்
                                               - பிள்ளையார்
அவல்பொரி கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும் 
கவலையின்றித் தின்னுவார் கண்ணை மூடித் தூங்குவார்
                                               - பிள்ளையார்
கலியுகத்தின் விந்தையைக் கான வேண்டி அனுதினம் 
எலியின் மீது ஏறியே இஷ்தம் போலச் சுற்றுவார்
                                               - பிள்ளையார்


                                          ஜெய கணேச

ஜெய கணேச ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்
சரவணபவ சரவணபவ சரவணபவ பா ஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷமாம்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்
கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷமாம்
ஜெயலரஸ்வதி ஜெயலரஸ்வதி ஜெயலரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ரக்ஷமாம்
ஜெயலெக்ஷமி ஜெயலெக்ஷமி ஜெயலெக்ஷமி பாஹிமாம்
ஸ்ரீலெக்ஷமி ஸ்ரீலெக்ஷமி ஸ்ரீலெக்ஷமி ரக்ஷமாம்
பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷமாம்
ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய பாஹிமாம்
ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ரக்ஷமாம்
சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரிஸ சபரிகிரிஸ சபரிகிரிஸ ரக்ஷமாம்
ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்
ஆஞ்சனேய  ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷமாம்

                                             கணேச சரணம்

கணேச சரணம் சரணம் கணேசா
சரணம் சரணம் சரணம் கணேசா
மூழுமுதற் பொருளே சரணம் கணேசா
மூத்தவன் நீயே சரணம் கணேசா - கணேசா

பார்வதி பாலா சரணம் கணேசா
மாலவன் மருகா சரணம் கணேசா
சக்தியின் மைந்த சரணம் கணேசா
சகலமும் அருள்வாய் சரணம் கணேசா -கணேசா

யானை முகத்தோனே சரணம் கணேசா
நான் உன்னைப் பணிந்தேன் சரணம் கணேசா
கானில் வாழும் சரணம் கணேசா
பாவம் போக்கும் சரணம் கணேசா - கணேசா

என்பிழை பொறுப்பாய் சரணம் கணேசா
ஈஸ்வரன் மைந்த சரணம் கணேசா
உன்னருள் இன்றி சரணம் கணேசா
உலகம் மகிழுமோ சரணம் கணேசா - கணேசா

கனிதனைப் பெற்றிட சரணம் கணேசா
கணமதில் ஞாலமாய் சரணம் கணேசா
தந்தையைச் சுற்றியே சரணம் கணேசா
கனிதனைப் பெற்றவா சரணம் கணேசா - கணேசா

கன்னிமூலனே சரணம் கணேசா
இனியெனைக் காத்திட சரணம் கணேசா
தடையென்ன மூலவா சரணம் கணசா
தயவுடன் வருவாய் சரணம் கணேசா - கணேசா


சரணம் சரணம் கணேசா என் கணேசா
சபரிமலை ஐயன் கணேசா - சரணம்

மூலப்பரம் பொருளே மூக்கண்ணணார் தன் மகனே
முந்தி விநாயகனே முருகனுக்கு மூத்தவனே - சரணம்

சிவணாண்டி தன் மகனே சிவபெருமான் மருமகனே
சக்தியின் பாலகனே சர்வமயம் நீதானய்யா - சரணம்

ஆறுபத்து தினங்களாக அனுதினமும் சரணம் சொல்ல
யானைமுகச் சிதேவனே ஆதரிப்பாய் உட்புரிவாய் - சரணம்

முருகனின் சோதரனே முக்கண்ணணார் தன் மகனே
முந்தி விநாயகனே முருகனுக்கு முத்தவனே - சரணம்

கணேச சரணம் சாமியே சரணம்
கணேச சரணம் சாமியே சரணம்
கணேச சரணம் சாமியே சரணம்


                             பச்சை மயில் வாகனனே

பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா வா –என
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் –அதில்
எள்ளளவும் ஐயமில்லையே - பச்சை

கொச்சை மொழியானாலும் உன்னைக் 
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சையெல்லாம் அகன்றதப்பா – எங்கும்
சாந்தி நிலவுதப்பா - பச்சை

நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – வாவா
சேவல் கொடி மயில் வீரா - பச்சை

வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும் 
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – முருகா
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா - பச்சை

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையாய் வரம் தருவாய் – உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம் - பச்சை

                           ஓடி வா முருகா

ஓடிவாமுருகா நீ ஓடிவா கந்தா
உமையவள் தன்மகனே ஓடிவா முருகா
                              - ஓடிவா
கணபதி சோதரனே ஓடிவா முருகா
கண்கண்ட தெய்வமே நீ ஓடிவா முருகா
ஆறுமுக வேலனே ஓடிவா முருகா
ஏறுமயில் ஏறி விளையாடிவா முருகா
                               - ஓடிவா
தெய்வானை வள்ளியோடு ஓடிவா முருகா
செந்தில் வடிவேலவனே ஓடிவா முருகா
ஆறுமுக தோற்றத்தோடு ஓடிவா முருகா
அரோகரா அரோகரா ஆடிவா முருகா
                               - ஓடிவா
தைமாதம் பிறந்திடவே ஓடிவா முருகா
நல்லூரில் அமைந்தவனே ஓடிவா முருகா
சன்னதியில் அமைந்தவனே ஓடிவா முருகா
தரணியில் கொண்டாட்டமாம் ஓடிவா முருகா
                                  - ஓடிவா
பாலோடு பஞ்சாமிரதம் ஓடிவா முருகா
பழநிமலை ஆண்டியாக ஓடிவா முருகா
தைப்பூசத் திருநாளில் ஓடிவா முருகா
தங்கத்தேர் பவனியிலே ஆடிவா முருகா
                                   - ஓடிவா
கடிவாரம் குத்தி வந்தோம் ஓடிவா முருகா
ஆண்டி உண்ணைக் காணவந்தோம் ஓடிவா முருகா
அருளை எல்லாம் தருபவனே ஓடிவா முருகா
அன்னை சக்தி பாலகனாய் ஓடிவா முருகா
                                     - ஓடிவா
பன்னீரில் அபிஷோகணக ஓடிவா முருகா
பழநிமலை முருகனாக ஓடிவா முருகா
தண்டபாணி தெய்வமே நீ ஓடிவா முருகா
தங்கத்தேரில் நீ அமர்ந்து ஆடிவா முருகா
                                                                               - ஓடிவா

                     வேல் வேல் வேலாயுதா

வேல் வேல் வேலவனே வேலாயுதா
வேங்கைமர மாணவரே வேலாயுதா
                    - வேல் வேல்
வேல் வேல் வேலவனே வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா
                     - வேல் வேல்
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதா
ஆறுமுக மாணவரே வேலாயுதா
                     - வேல் வேல்
திருச்செந்தூரில் வாழ்பவனே வேலாயுதா
என்மனதைத் தீர்த்திடுவாய் வேலாயுதா
                     - வேல் வேல்
பழனிமலை வேலவனே வேலாயுதா
பழவினையைத் தீர்த்திடுவாய் வேலாயுதா
                      - வேல் வேல்
பால்குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப் பார்க்க ஆனந்தமே வேலாயுதா
                       - வேல் வேல்
திருத்தணிகை வேலவனே வேலாயுதா
திருவருளை அருளவேண்டும் வேலாயுதா
                       - வேல் வேல்
காவடிகள் ஆட்டத்தில் வேலாயுதா
கஷ்தமெல்லாம் தீர்ந்து போச்சு வேலாயுதா
                       - வேல் வேல்
சுவாமிமலை வேலவனே வேலாயுதா
சுப்ரமணிய மானவரே வேலாயுதா
                        - வேல் வேல்
சோலைமலை வேலவனே வேலாயுதா
சொர்க்கம் எல்லாம் தெரியுதய்யா வேலாயுதா
                         - வேல் வேல்
குன்றக்குடிக் குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளரே வேலாயுதா
                         - வேல் வேல்
கருனையோடு காத்தருள்வாய் வேலாயுதா
கந்தா உன்னைத் தெண்டனிட்டோம் வேலாயுதா
                         - வேல் வேல்
ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஓன்று 
ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஓன்று
கூறும் அடியார்கள் வினைதீர்த்த முகம் ஓன்று
குன்றுருவாய் வேல்வாங்கி நின்ற முகம் ஓன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஓன்று – குற 
வள்ளியை மணம் புனர வந்த முகம் ஓன்று
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலமாய் அமர்ந்த பெருமானே

                            சிதம்பர நாதனே
ஓ.... சிதம்பரநாதனே தில்லை நடராஐனே
சிவகாமி நேசனே வா – உன்
நடனத்தைக் காணவே நாடிவந்த
தேவனே நலம் பெற அருள்புரிவாய்
- ஓ சிதம்பர நாதனே
பிட்டுக்கு மண் சுமந்த ஈசா
பிரம்படி பட்டு வந்த நேசா
கட்டு கட்டு விறகினை கடைத்தெருவில் விற்கவந்த
கயிலைநாதனே வா – உன்
நடனத்தை காணவே நாடிவந்த
தேவனே நலம்பெற அருள்புரிவாய்
- ஓ சிதம்பர நாதனே
சாம்பல் நிறம் பூசிக்கிட்டு வந்து தலை 
ஆண்டி வேசம் போட்டுக்கிட்டு நீன்று
சாம்பசிவ சங்கரா வா – உன்
நடனத்தை காணவே நாடிவந்த
தேவனே நலம்பெற அருள் புரிவாய்
- ஓ சிதம்பர நாதனே
கங்கையை தலையினில் சுமந்தாய் – உடல் 
பாதியை சக்திக்கு தந்தாய்
தேவர் குறை தீர்ந்திடவே முருகனை
படைத்திட்ட சிவகுரு நாதனே வா
நடனத்தை கானவே நாடிவந்த
தேவனே நலம் பெற அருள்புரிவாய்
- ஓ சிதம்பர நாதனே

                         ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓடி ஓடி ஓடி ஓடி உட்களந்த ஜோதியே
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடியே எனநிறைந்த கோடியே
                                        - ஓம் நமச்சிவாய
எண்ணிலே இருந்த ஓன்றை யாண் அறிந்ததில்லையே
எண்ணிலே இருந்த ஓன்றை யான் அறிந்து கொண்டபின்
எண்ணிலே இருந்த ஓன்றை யார் காணவல்லரோ
எண்ணிலே இருந்த ஓன்றை யான் உணர்ந்து கொண்டனே
                                                 - ஓம் நமச்சிவாய
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து தடுக்குவார்
பெண்கலம் கவிழ்ந்தபோது வேனுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே 
                                        - ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாயமே உணர்ந்தமெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்தமெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்தமெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்களர்ந்து நிற்குமே 
                                          - ஓம் நமச்சிவாய

                                   அம்மன் பாடல்

                                   சமயபுரத்தாளே

ஆயி மகமாயி ஆயிரங்கண்ணுடையாள்
நீலி திரி சூளி நீங்காத பொட்டுடையாள்
சமயபுரத்தாளே சாம் ராணி வாசகியே
சமய புரத்தைவிட்டு சபைதனிலே வாருமம்மா
சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
மல்லிகைச் சரம்தொடுத்து மாலையிட்டோம் – அரிசி
மாவிளக்கு ஏற்றிவைத்து பொங்கலும் வைத்தோம்
துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மா
தூயவளே என் தாயே மாரியம்மா
                                            - சமயபுர
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் – உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்
எட்டுத் திசைகளையும் ஆள்பவளே – அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா
                                            - சமயபுர
கத்திக் கதறுகிறோம் கேட்கலையோ – தாயே
கல்லோ தான் உன் மனமும் கரையலையோ
உலகமெல்லாம் ஆடுதம்மா உன் சிரிப்பிலே – எங்கள்
உமையவளே என் தாயே மாரியம்மா
                                           - சமயபுர
காலில் சலங்கையொலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா
பூவாடை வீசுதம்மா பூமகளே – உனக்கு
பாமாலை கொண்டு வந்தோம் பாரம்மா
                                            - சமயபுர

                         
                           ஜெய ஜெய தேவி

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
துர்க்கா தேவி சரணம்
                                      - ஜெய ஜெய தேவி
துர்க்கை அம்மனைத் துதித்தால் – என்றும்
துன்பம் பறந்தோடும் 
தர்மம் காக்கும் தாயும் அவளே
தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகள் ஓடும்
சர்வ மங்களம் கூடும்
                                        - ஜெய ஜெய தேவி
பொற்கரங்கள் பதினெட்டும் – நம்மைச்
சுற்றிவரும் பகை விரட்டும் 
நெற்றியிலே குங்கும்ப் பொட்டும்
வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய்போல் நம்மைக் காப்பவளே
                                         - ஜெய ஜெய தேவி
சங்கு சக்கரம் வில்லும் அம்பும் 
அங்குசம் வாளும் வேலும் சூலமும்
தங்க க்கைகளில் தாங்கி நீற்பாள்
சிங்கத்தின் மேலவள் வீற்றிருப்பாள்
தீங்களை முடிமேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க் கரசியும் அவளே
அங்கயற் கன்னியும் அவளே
                                      - ஜெய ஜெய தேவி
கனக துர்க்க தேவி சரணம்




அருள்மிகு ஐயப்பன் நூற்றெட்டு சரணங்கள்

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் அரிகர சுதனே  சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் ஈடில்லாத் தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம் போருளே சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஓப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா
ஓம் ஓளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம் பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் செளபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சிவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சன்கோவில் அரசே சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்பழைப் பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் விரமணி கண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே! சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையிலே பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலியின் வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓத் தூய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நிலவஸ்த்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்த்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஓழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனைப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரிவலந்தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா ந்தி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திருவேணி சங்கமே சரணம் ஐயப்பா
ஓம் திருஇராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஓளியை சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பழவினைகள் ஓழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரிபீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினேட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் ச்ன்னதியே சரணம் ஐயப்பா
ஓம் பரவச பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர பிரியரே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புறத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா



அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன். ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.



மஞ்சமாதா மஞ்சமாதா மஞ்சமாதா
மாளிகைப் புறத்தம்மா மஞ்சமாதா

மாகையிலை உருவெடுத்த மஞ்சமாதா
மக்கள் குறைதீர்ப்பவளே மஞ்சமாதா

ஐயனிடம் போர் புரிந்தாய் மஞ்சள் மாதா
அடுத்தரூபம் எடுத்து விட்டாய் மஞ்சள் மாதா

ஐயன்பாதம் தொட்டவுடன் மஞ்சள் மாதா
பெயரையெல்லாம் பெற்றுவிட்டாய் மஞ்சள் மாதா

கன்னிச்சாமி வரல்லண்ணா மஞ்சள் மாதா
கழுத்தில் மாலை இடுவதாக மஞ்சள் மாதா

ஐயனுமே கூறிவிட்டார் மஞ்சள் மாதா
அதற்கு நீயும் காத்திருந்தாய் மஞ்சள் மாதா

மகர சங்கர நிதி அன்று மஞ்சள் மாதா
மணிகண்டனைப் பார்க்கப் போனாய் மஞ்சள் மாதா

சரங்குத்தி ஆலினிலே மஞ்சள் மாதா
சரங்கள் வந்து குவிந்த தென்ன மஞ்சள் மாதா

எண்ணிய எண்ணமெல்லாம் மஞ்சள் மாதா
விடலைத் தேங்காய் போல் ஆனதென்ன மஞ்சள் மாதா

கன்னிச்சாமி வந்ததினால் மஞ்சள் மாதா –உன்
கண்ணிரூபம் நிலைத்ததம்மா மஞ்சள் மாதா

சரணமப்பா சரணமய்யா சாமியே
சரணமப்பா சரணமய்யா சாமியே ஐயப்பா
வரனுமப்பா வரனுமய்யா சாமியே ஐயப்பா

நெற்றியிலே நீறனிந்து நீல ஆடை தாங்கியே
சுற்றி வந்து ஐயன் பாதம் தேடினேன் ஐயப்பா
சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன் ஐயப்பா
           - சரணமப்பா
பாவக்கடலை கடந்து சென்று பரமண்டி சேர்ந்திடவே
தவக்கோலம் துளசிமாலை தாங்கினேன் ஐயப்பா
தரணியிலே உண் புகழை பாடினேன் ஐயப்பா
            - சரணமப்பா
சரமெடுத்து தீர்த்தமாடி வேட்டையாடி பெருவழியில்
நடக்கையிலே கரிமலையில் கதறுகிறேன் ஐயனே
என்னைக் காத்தருள வேண்டுகிறேன் ஐயனே ஐயப்பா
            - சரணமப்பா
பாவணமாம் பம்பாநதி பாலகனே உனை வேண்டி
பாட்டுப் பாட பாவவினை போகிதே ஐயப்பா
பக்தியோடு கை இரண்டும் கூடுதே ஐயப்பா
            - சரணமப்பா

நீலி மலை ஏற்றத்திலே நின்று நின்று ஏறும் போது 
நினைவெல்லாம் உன்னிடத்தில் போகுதே ஐயப்பா
உன் திருவடியை வணங்கிடவே தோனுதே ஐயப்பா
            - சரணமப்பா
ஆறுவாரம் நோன்பிருந்து ஆறுமூன்று படியேறி
ஆரவார கூட்டத்துக்கு நடுவிலே ஐயப்பா
ஆனந்தமாய் தரிசனமும் காண்போமோ ஐயப்பா
             - சரணமப்பா
மகர ஜோதியைக் கண்டு மனமாரச் சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை காண்போமே ஐயப்பா
மறுபடியும் உன்மடியில் வருவோமே ஐயப்பா
             - சரணமப்பா

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்னைத் 
தேடிவருவேன் ஐயப்பா நாடிவருவேன்
எறும்பாக நான் பிறந்தால் ஊர்ந்து வருவேன்
கரும்பாக நான் பிறந்தால் பக்கமிருப்பேன் 
கழுகாக நான் பிறந்தால் வட்டமிடுவேன் 
மெழுகாக நான் பிறந்தால் உருகிமகிழ்வேன்
சோலையிலே நான் பிறந்தால் பூக்கள் கொடுப்பேன்
மாலையாக நான் பிறந்தால் மார்பிலிருப்பேன்
தண்ணீராய் நான் பிறந்தால் தாவி வருவேன்
கண்ணீராய் நான் பிறந்தால் கண்ணிலிருப்பேன்
பாம்பாக நான் பிறந்தால் ஊர்ந்து வருவேன்
பல்பியாக நான் பிறந்தால் சொல்லி வருவேன்
புலியாக நான் பிறந்தால் பாய்ந்து வருவேன்
புள்ளிமானாக நான் பிறந்தால் துள்ளி வருவேன்
பூனையாக நான் பிறந்தால் கத்தி வருவேன்
யானையாக நான் பிறந்தால் ஓடிவருவேன்
மயிலாக நான் பிறந்தால் ஆடிவருவேன்
குயிலாக நான் பிறந்தால் பாடிவருவேன்
                                   - எத்தனை
மானாக நான் பிறந்தால் தாவிவருவேன்
தேனாக நான் பிறந்தால் தேடிவருவேன்
                                    - எத்தனை

இலாகி லாகா இல்லல்லோ
வாபர் சுவாமி ஊரல்லோ
எரிமேலி நாங்கள் வந்தல்லோ
கரும்புள்ளி செம்புள்ளி இட்டல்லோ
    - இலாகி
மணிகண்டன் நண்பர் ஆனவரே
மாமனி மாலையும் ஆனவரே
ஆஞ்சா  நெஞ்சம் கொண்டவரே
அல்லாவின் இறையடி சென்றவரே
     - இலாகி
எதிர்த்தவர் யாவரையும் வென்றவரே
இல்லாத தென்றும் தந்தவரே
இஞ்சிப்பாறையில் ஆண்டவரே
எரிமேலி தன்னில் குடிகொண்டவரே
      - இலாகி
வீரமும் தீரமும் கொண்டவரே
எரிமேலி கோட்டையை ஆண்டவரே
முன்னும் பின்னும் துனைபவரே கன்னிமாரை காத்திடவே 
        - இலாகி
உன்னிடம் நாங்கள் வந்திடுவோம்
பேட்டை துள்ளி ஆடிடுவோம்
வாபர் சாமி திந்தக்க தோம் 
ஐயப்ப சுவாமி தித்தக்க தோம்
         - இலாகி

                      கன்னிமுல கணபதி

கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்கள்
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
ஐயப்பா ஐயப்பா என்று சொல்லி நாங்கள்
ஆறு வாரந்தானே நோன்புமிருந்தோம்

குருசுவாமி துனைகொண்டு அவர்பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமையா
ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாய் நடந்து வந்தோமையா
             - கன்னி
குருவாயூர் கோயில் முதல் கன்னியாகுமரிவரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமையா நாங்கள்
தரினமே செய்துகிட்டு வந்தோமையா
எரிமேலி பேட்டை துள்ளி வாபரையே வேண்டிக்கிட்டு
பேரூர் தோட்டில் பொரிபோட்டு வந்தோமையா
              - கன்னி
காளைகட்டி நிலையம் வந்து அமுதாமலை ஏறிகிட்டு
கரிமலையின் உச்சியிலே வந்தோமையா
பம்பையிலே குளிச்சிபுட்டு பாவங்களைத் தொலைச்சிபுட்டு
நீலிமலை ஏறிகிட்டு வந்தோமையா
              - கன்னி
பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூர ஜோதிதனை கண்டோமையா
மகரஜோதியை கண்டு மனமார சரணம் போட்டு
மணிகண்டா உன்பெருமை அறிந்தோமையா
              - கன்னி
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம்
சுவாமியே சரணம் சரணமய்யா
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சரணமய்யா.

சம்போ மஹா தேவனே
சம்போ மஹாதேவனே
சம்பூதன் குமாரனே
சரவண சோதர பாலனே
சரணம் சரணம் ஐயனே
- சம்போ
பம்பா ந்தி பாலனே
பந்தள ராஐன் செல்வனே
வன்புலி வாகன தேவனே
என் துயர் தீர்க்கனும் ஐயனே
- சம்போ
மஹிஷமநர்த்தன சுந்தரா
மலர்மகள் கொஞ்சும்  கோமளனே
மரகதமணியுடன் மைந்தனே
மாமலை வாழும் ஐயனே
- சம்போ
கரிமலை கறையான் என்னை நீயே
கருனை செய்யனும் என்றுமே
மகர விளக்கின் ஜோதியே
மங்களமாய் நான் கானவே
- சம்போ
பலபல கிருதிகள் பாடுவேன்
பதமலர் தொழுதேன் ஐயனே
பரிதாபத்தை தீர்க்கவே
பதினெட்டாம் படி ஏற்றவே
- சம்போ
பனசூசயன் மைந்தனே
பாரில் பரம ஏழைநான்
யாரும் துனையும் எனக்கில்லையே
ஹரி ஹிர சுதனாம் ஐயனே
- சம்போ

                 பகவான் சரணம்

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா


அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா

கரிமலை வாசா பாபவிநாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

மகிஷ சம்ஹாரா மதகஐவாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தரரூபா
சரணம் சரணம் ஐயப்பா

ஆறுவாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காணவந்தோம்
பால் அபிஷேகம் உனக்கப்பா இந்த
பாலகனை கடைக்கண் பாரப்பா


முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எமக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா உன்
பொற்பத மலர்கள் எமக்கப்பா

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா

நெய்யபிஷேகம் உனக்கப்பா உன்
திவ்ய தரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா அருள்
செய்யப்பா மனம் வையப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவானே பகவதியே தேவனே தேவியே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம்
                                 -----------

சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா
நி இருப்பது மெய்யப்பா சாமி ஐயப்பா

கனினிமூல கணபதியே சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
பக்தர்களை காத்திடுவாய் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
குருவிடம் மாலை போட்ட சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
குருபூஜை செய்து வந்தோம் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
அச்சன் கோயில் அர்ச்சனை சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
அன்றாடம் வணங்கி வந்தோம் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
எரிமேலி பேட்டை துள்ளி சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
வாவரையும் வணங்கி வந்தோம் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
எரிமேலி சாஸ்த்தாவே சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
ஏழைகளைக் காக்க வேண்டும் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
அழுதா நதிகரையினிலே சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
அழவைத்து பார்க்கிறாயே சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
பாவம் தீர்க்கும் பம்பா நதிகரையிலே சாமி சரணம்
எங்க ஐயப்பா சரணம்
பாவமெல்லாம் போக்க வேண்டும் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா

காந்த மலை ஜோதியினைக் கானவே சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
கன்னிமாரைக் காக்க வேண்டும் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
பதினெட்டாம் படிகடந்து சாமியே சரணம்
எங்க ஐயப்பா சரணம்
பக்தர்களை காக்க வேண்டும் சாமி ஐயப்பா
- சாமி சாமி ஐயப்பா
                                 -------------

பழனிமலை முருகனுக்கு அரகரோகரா
சபரிமலை ஐயனுக்கு சரணம் ஐயப்பா
அங்கே அரகரோகரா
இங்கே சரணம் ஐயப்பா

பழனிமலை முருகனுக்கு மயில் வாகனம்
சபரிமலை ஐயனுக்கு புலி வாகனம்
அங்கே மயில் வாகனம்
இங்கே புலி வாகனம்

பழனிமலை முருகனுக்கு ஓருமலை ஏற்றம்
சபரிமலை ஐயனுக்கு பலமலை ஏற்றம் 
அங்கே பலபல படிகள்
இங்கே பதினெட்டுப் படிகள்

பழனிமலை முருகனுக்கு காவடிக் தாங்கள்
சபரிமலை ஐயனுக்கு இருமுடிக் தாங்கள்
அங்கே காவடித் தாங்கள்
இங்கே இருமுடித் தாங்கள்


பழனிமலை முருகனுக்கு பாலபிஷேகம்
சபரிமலை ஐயனுக்கு நெய்யபிஷேகம்
அங்கே பாலபிஷேகம்
இங்கே நெய்யபிஷேகம்
                        -------------

                     அன்புள்ள நாதனே

அன்புள்ள நாதனே அரிகர சுதனே
அகிலம் எல்லாம் தேடினேன் காணவில்லை
நம்ம அருகினில் நிற்கிறான் தெரியவில்லை
அன்புள்ள
வில்லாளி வீரனே வீரமணி கண்டனே
வீதி எல்லாம் தேடினேன் காணவில்லை
நம்ம எதிரிலே நிற்கிறான் தெரியவில்லை
அன்புள்ள
பூலோகநாதனே பூமிப்பிரபஞ்சனே
பூமியெங்கும் தேடினேன் காணவில்லை
நம்ம பூஜையில் நிற்கிறான் தெரியவில்லை
அன்புள்ள
பம்பா நதி வாசனே பந்தளத்து ராஜாவே
பார் எல்லாம் தேடினேன் காணவில்லை
நம்ம பஜனையில் நிற்கிறான் தெரியவில்லை
அன்புள்ள
காந்தமலை ஜோதியே கற்பூர நாயகனே
காடெல்லாம் தேடினேன் காணவில்லை
நம்ம கண் எதிரிலை நிற்கிறான் தெரியவில்லை
அன்புள்ள
மாமலை வாசனே மணிகண்ட தெய்வமே
மலை எல்லாம் தேடினேன் காணவில்லை
நம்ம மனதினில் நிற்கிறான் தெரியவில்லை
அன்புள்ள
மாதா பிதா தெய்வமே மணிகண்ட ராஜவே
மலையெல்லாம் தேடினேன் காணவில்லை
நம்ம மனதினில் நீற்கிறார் தெரியவில்லை
அன்புள்ள
கலியுக வரதனே கண்கண்ட தெய்வமே
காடெல்லாம் தேடினேன் காணவில்லை
நம்ம கண்ணெதிரே நிற்கிறார் தெரியவில்லை
அன்புள்ள
                                            -----------------

கல்லானாலும் அமுதாமலையில் கல்லாவேன்
கல்லானாலும் அமுதாமலையில் கல்லாவேன்
ஓரு சொல்லானாலும் சரணம்மென்றே சொல்லாவேன்
நதி நீரானாலும் பம்பாந்தியில் நீராவேன்
சிறு குன்றானாலும் சபரி மலையில் குன்றாவேன்
                             - கல்லானாலும்
சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
ஓரு சரமானாலும் சரங்குத்தி ஆலில் சரமாவேன்
சிறு பொறியானாலும் பேருர் தோட்டில் பொறியாவேன்
நான் படியானாலும் திருபதினெட்டுப் படியாவேன்
                            - கல்லானாலும்
மணியானாலும் துளசி மாலை மணியாவேன்
பசும் புல்லானாலும் ஐயன் அருளால் புல்லாவேன் 
நான் மலையானாலும் சபரிகாட்டில் மலையாவேன் நான்
ஓளியானாலும் மகரஜோதி ஓளியாவேன் நான்
                              - கல்லானாலும்
மலரானாலும் பூங்காவனத்தில் மலராவேன்
ஓரு மரமானாலும் சபரிகாட்டில் மரமாவேன்
வில்லானாலும் ஐயன் கையில் வில்லாவேன்
நெய்யானாலும் முத்திரை தேங்காய் நெய்யாவேன்
                               - கல்லானாலும்
                                           -------------

யானை வருது பாருங்கைய்யா
யானை அசைந்து வருது பாருங்கைய்ய
அசைந்து வரும் யானைமேலே கணபதியை பாருங்கைய்யா

மயில் வருது பாருங்கைய்யா
மயில் ஆடிவருது பாருங்கைய்யா
ஆடிவரும் மயில்மேலே வேல்முருகனை பாருங்கைய்யா

நந்தி நடந்து வருது பாருங்கைய்யா
நந்தி நடந்து வருது பாருங்கைய்யா
நடந்து வரும் நந்திமேலே நடராஐனைப் பாருங்கைய்யா

கருடன் வருது பாருங்கைய்யா
கருடன் பறந்து வருது பாருங்கைய்யா
பறந்து வரும் கருடன்மேலே பார்த்தசாரதியைப் பாருங்கைய்யா

புலி வருது பாருங்கைய்யா
புலி பதுங்கி வருது பாருங்கைய்யா
பதுங்கி வரும் புலி மேலே பந்தளராஐனைப் பாருங்கைய்யா


சிங்கம் வருது பாருங்கைய்யா
சிங்கம் சீறிவருது பாருங்கைய்யா
சீறிவரும் சிங்கத்தின் மேலே கருமாரியைப் பாருங்கைய்யா

மாயிவாறா பாருங்கைய்யா
மக மாயிவாறா பாருங்கைய்யா
மகமாயி கழுத்தினிலை சந்தனமாலையைப் பாருங்கைய்யா

குதிரை வருது பாருங்கைய்யா
குதிரை குதித்து வருது பாருங்கைய்யா
குதித்து வரும் குதிரை மேலே குருசாமியைப் பாருங்கைய்யா

பாம்பு வருது பாருங்கைய்யா
பாம்பு ஊர்ந்து வருது பாருங்கைய்யா
ஊர்ந்து வரும் பாம்பின் மேலே பரமசிவனைப் பாருங்கைய்யா

கரடி வருது வாருங்கைய்யா
கரடி கத்தி வருது பாருங்கைய்யா
கத்திவரும் கரடி மேலே கறுப்பன சாமியைப் பாருங்கைய்யா
                                   - யானைவருது

                      வில்லாளி வீரன்

சரணம் சொல்லிக் கூப்பிடுவோம்
சபரிமலை நாதனை
வரனும் என்று அழைத்திடுவோம்
வரம் கொடுக்கும் ஈசனை
வில்லாளி வீரனே வீரமணி கண்டனே தமிழ்
சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசன் மைந்தனே
                         - வில்லாளி
கார்த்திகை மாதத்தில் மாலையிட்டோம் நாங்கள்  உனைக் 
கண்ணாரக் காணும்வரை கண்ணுறக்கம் இல்லையே
                         - வில்லாளி
மாமலையில் வாழுகின்ற மணிகண்டசாமியே உனை
மனதார வேண்டுகிறோம் மனமிரங்க வில்லையா
                         - வில்லாளி
நீயிருக்கும் சபரியிலே இடமும் உண்டோ சொல்லையா
நீங்கா உந்தன் நினைவிருந்தால் அது போதுமே ஐயப்பா
                         - வில்லாளி
காடுமலை மெடெல்லாம் கடந்து நாங்கள் வந்தோம் 
காருண்யமூர்தியினைக் கண்ணாறக் காணவே
                        - வில்லாளி
ஏறாத மலையெல்லாம் ஏறிவரும் போதிலே
மலையேற்றி தந்திடுவாய் மன்னவனே மணிகண்டா
                        - வில்லாளி
மார்கழி மாத்தத்தில் இருமுடியே தாங்கியே
ஐயா உந்தன் மகரஜோதி கண்டிடவே வருகின்றோம் 
                        - வில்லாளி
இருமுடியை சுமந்துகிட்டு இன்பமுடன் புறப்பட்டோம் 
இன்ப துன்பன் சொந்தபந்தம் எல்லாமே நீ ஐயப்பா
                        - வில்லாளி
பம்பையிலே பிறந்து விட்ட பந்தளத்து மாமணியே
பாவி எனைக் காத்தருள்வாய் பார்புகளும் வேந்தனே
                        - வில்லாளி
அரிஹர புத்தரனே ஆறுமுகன் சோதரனே
ஆண்டவனே உன் தரிசனம் கிடைத்திடவும் வேண்டுமைய்யா
                         - வில்லாளி
தங்கத்திரு மேனியனே தவக்கோலம் கொண்டவனே
தரணியில் உண்னைவிட்டால் வேறுகதி யாருமில்லை
                           - வில்லாளி
அங்கும் இங்கும் சரணகோஷம் கேட்குதய்யா ஐயப்பா
சாமியே ஐயப்பா சாமியே ஐயப்பா சாமியே ஐயப்பா


                     பொன்னான தெய்வம்

பொன்னான தெய்வமே எந்நாளும் 
எங்களைக் காத்திட வேனுமப்பா ஐயப்பா
காத்திட வேணுமப்பா
- பொன்னா
நெற்றியிலே திருநீரும் பக்தியிலே கண்ணீரும்
நாங்களும் தருவோமப்பா ஐயப்பா
நாங்களும் தருவோமப்பா
- பொன்னா
ஓயாமல் ஓழியாமல் உன் புகழ் பாடிட
வரங்களும் தருவாயப்பா ஐயப்பா
வரங்களும் தருவாயப்பா
- பொன்னா
கார்த்திகை திங்கள் முதல் கற்பூரம் ஏற்றியே
சரணங்கள் சொல்வோமப்பா ஐயப்பா
சரணங்கள் சொல்வோமப்பா
- பொன்னா
குழந்தை உன் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு
கொஞ்சிடத் தோணுதப்பா ஐயப்பா
கொஞ்சிடத் தோணுதப்பா
- பொன்னா
சந்தனப் பொட்டிட்டு சதா உன் பக்கத்தில் 
சாய்ந்திட்த் தோணுதப்பா ஐயப்பா
சாய்ந்திடத் தோணுதப்பா
- பொன்னா
எரிமேலி தன்னிலே பேட்டைகள் ஆடியே
விரைவினில் வருவோமப்பா ஐயப்பா
விரைவினில் வருவோமப்பா
- பொன்னா
பொய் ஏதும் பேசாமல் மெய்தினம் பேசி
நெய்யோடு வருவோமப்பா தேங்காய்
நெய்யோடு வருவோமப்பா
- பொன்னா
படி பதினெட்டும் கடந்துமே வந்து
அபிஷேகம் செய்வோமப்பா நெய்யால்
அபிஷேகம் செய்வோமப்பா
- பொன்னா
தை முதல் நாளன்று பொன்னம்பல மேட்டில்
ஜோதியைக் காண்டோமப்பா
மகர ஜோதியைக் காண்டோமப்பா
- பொன்னா

                         பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

இருமுடி தாங்கி ஓருமனதாகி குருவெனவே வந்தோம் 
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் 
திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரிமலைக்கே சென்றிடுவார்
- ஸ்வாமியே
கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே உனைப்
பார்க்க வேண்டியே தவமிருந்து
- ஸ்வாமியே
இருமுடி எடுத்து எரிமேலி வந்து
ஓருமனதாகிப் பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
- ஸ்வாமியே
அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
வழிகாட்டிடடவே வந்திடுவார் அய்யன்
வன்புலி ஏறி வந்திடுவார்
- ஸ்வாமியே
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
பெருநதி பம்பை கண்டிடுவார்
- ஸ்வாமியே
கங்கை நதிபோல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி 
சங்கரன் மகனைக் கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
- ஸ்வாமியே
நீலிமலை ஏற்றம்
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே 
அருட் காவலனாயிருப்பார்
தேகபலம்தா பாதபலம்தா
தேகபலம்தா என்றால்
அவர் தன் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும் 
பாதத்தைத் தந்திடுவார் நல்ல
பாதையைக் காட்டிடுவார்
- ஸ்வாமியே
சபரீ பீடமே வந்திடுவார்
சபரி அன்னையைப் பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும்
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்
பதினெட்ட படிமீது ஏறிடுவார்
கதியென்றவனைச் சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார் அய்யனைத்
துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்
பள்ளக் கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே
சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

சத்திய ஜோதி தெரியுதப்பா

சத்திய ஜோதி தெரியுதையா
நித்திய வாழ்வு புரியுதையா 
சாஸ்தா ஆலயம் தெரியுதையா
சங்கடம் எல்லாம் மறையுதையா
- சத்திய
மாமலை ஏறிப் போகையிலே
மனதில் இன்பம் தோன்றுதையா
சபரிக் காட்டில் நடக்கையில்
சாந்தி நிறைந்து தோன்றுதையா
- சத்திய
பதினெட்டாம் படிகள் தாண்டையிலே
பக்தியும் எல்லையைத் தாண்டுதையா
பந்தளக் குழந்தையைக் காண்கையிலே
சிந்தையில் சொர்க்கம் தோன்றுதையா
- சத்திய
ஐயனை மனதில் நினைக்கையிலே
ஐயம் எல்லாம் அகலுதையா
மகர ஜோதியைக் காண்கையிலே
மரணத்தின் பயமும் தீருதையா
- சத்திய
கார்த்திகை மாதம் மாலையிட்டு
காலையும் மாலையும் பூஜையிட்டு
இருமுடி தலையில் சுமந்து வந்து உன்
திருவடி துனையென நாடி நின்றோம்
- சத்திய

                         மணிகண்டா வா வா

மணிகண்டனே மணிகண்டனே வாவா நாங்கள்
மகரஜோதி கண்டிடவே வாவா உன்
பக்தரெல்லாம் பூஜை செய்தோம் வாவா அந்த
பரமசிவன் பாலகனே வாவா
- மணி
அச்சன் கோவில் அரசனே நீ வாவா
அச்சமெல்லாம் போக்கிடவே வாவா
ஆரியங்காவய்யாவே வாவா
ஆனந்த ரூபனே நீ வாவா
- மணி
குளத்துப்புழை பாலகனே வாவா
குழந்தை மணிகண்டனே நீ வா வா
எரிமேலி சாஸ்தாவே வாவா
எங்கள் குலதெய்வமே நீ வாவா
- மணி
பம்பை நதி பாலகனே வாவா
பரந்தாமன் மைந்தனே நீ வாவா
சபரிமலை நாயகனே வாவா
சஞ்சலங்கள் தீர்த்திடவே வாவா
- மணி
காந்தமலை ஜோதியே நீ வாவா
கண்கண்ட தெய்வமே நீ வாவா
கருணைக்கடலே நீ வாவா உன்
கன்னிகளைக் காத்திடவே வாவா
- மணி
மோகினியின் பாலகனே நீ வாவா
மோகன சுந்தரனே வாவா
அகிலலோக நாயகனே வாவா
ஆதரித்து அருள் புரிய வாவா
- மணி

Tuesday, June 14, 2011

கவிதைகள்

1) வெற்றியின் ஒளி

நான் முட்டிக் கொண்ட
போதெல்லாம் உடைந்து
போனது என் தலை மட்டுமல்ல…
வெற்றியின் கட்டுத் தளைகளும் தான்…

நான் விழுந்த போது
தேய்ந்து போனது
என் முகம் மட்டுமல்ல
தோல்வியின் அகமும்!

எத்தனையோ இரவுகள்
எத்தனையோ விளக்குகள்
ஆனாலும் எனது
கண்கள் எப்போதும்
வெற்றியின் ஒளியை நாடியே!

2)லட்சியம்

என் லட்சியங்கள் நச்சதிரங்களாக
எட்டாத தூரத்தில் மின்னுகின்றன
முயன்று பார்கிறேன் எட்டிப்பிடிக்க
நான் மூன்று அடி வைத்தால்
நான்கு அடி சறுக்கி விழுகின்றேன்
என் லட்சியங்கள் கை சேருமா
அல்லது கானல் நீராய் போகுமா...???

3)

நிலவின் ஒளி

அம்மாவசை தினத்தில்
நிலவின் ஒளி
எப்படி?

கண் எதிரே நீ.....

4)

எனது பெயர்

உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கின்றது என்று!!

5)

நீ, நான் & தெருக்குழாய்!

உன் குடத்தில்
விழாத வருத்தத்தில்
கீழே
சிந்திச் சிந்தி
தன்னை மாய்த்துக் கொள்கிறது
தண்ணீர்...

நீ வந்து
நிற்கும்
நேரங்களில்
கலராய்
மாறிப் போகின்றது
கருப்பு டாங்கு அங்கு...

தடுக்கி விழப் பார்த்த நீ
தாய் முகம் பார்த்து
வழியும் நேரங்களில்
தவற விட்ட குடத்தோடு
உருளுகிறது
என் மனமும்...

எங்கும் நிற்காத
உன் பஞ்சுக் கால்கள்
வரிசையில் நிற்கும்போது
அமர்ந்து கொண்டிருக்கும்போதும்
நான் நிற்கிறேன்
முட்களின்மீது...

For Booking Please Call

0091-9941635051

0091-9841915731

0091-9840294005

Just Call Us anytime to make your Booking. We are open round the clock, 24x7, 365 days.

PAVISH TRAVELS

Welcome to PAVISH TRAVELS. We are tourist car and van operators. Our service is round the clock, 24x7, 365 days.Our service is limited to South India and Our fleet has range of brand new cars and vans Sumo. Our office is located at No32, 1st Main Road, Mangala nagar, Porur, Chennai and we don't have any branches.We hope our website was helpful for your travel planning and now it’s your turn to execute the plan. Just Call or send us an e-mail about your plan. We can discuss the travel plan and make it organized to make your journey safe and efficient.